• Dec 26 2024

கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ சற்றுமுன் ரிலீஸ்! அடிப்பொலி மேஜிக்.. Vibe ஆகும் விஜய் பேன்ஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில், அடிக்கடி அது தொடர்பிலான அப்டேட்கள் வெளியாவதுடன், படக்குழுவினரும் அது சம்பந்தமான ப்ரோமோக்கள், வீடியோக்கள், போஸ்டர், ஸ்டோரி என சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மீனா சௌதாரி, லைலா சினேகா மைக் மோகன் உட்பட்ட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாகவும் கூறப்பட்டது.


கோட் படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்றைய தினம் தனது சமூக வலைத்தளத்தில் கோட் பாடலை கேட்க ரெடியா என ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தார். இந்த போஸ்டர் மிகவும் வைரலானது.


இந்த நிலையில், தற்போது அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார். தற்போது இதைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் பாட்டை விஜய் பாடினாரா? அல்லது யுவன் சங்கர் ராஜா பாடினாரா? என தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

மேலும், கோட் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 5 ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் படம் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement