• May 21 2026

இரு தரப்புக்கும் இடையில் யார் உண்மை பேசுகிறார்கள்? ரவி மோகன் விவகாரத்தில் புதிய சலசலப்பு!

shali / 5 days ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர்கள் பிரியப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.


சமீபத்தில் நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில கருத்துகளை வெளிப்படுத்தினார். அந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதுடன், ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடுமையான கருத்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள். என் அமைதியை பலவீனமாக எண்ண வேண்டாம். அதை பயன்படுத்தி யாரும் தவறாக நடக்க முயற்சிக்க வேண்டாம். இறுதியில் வெல்வது எப்போதும் உண்மையே.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும், இந்த பதிவுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கமெண்ட்ஸ் மூலம் ஆதரவு தெரிவித்திருப்பதும் விவாதத்தை அதிகரித்துள்ளது. திரை உலகத்தினரும் ரசிகர்களும் இந்த விவகாரத்தை நெருக்கமாக கவனித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இரு தரப்புக்கும் ஆதரவும் எதிர்ப்பும் கலவையாக வெளிப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement