• May 21 2026

ரசிகர் காலில் திடீரென விழுந்த சௌந்தர்யா.. நாகர்கோவில் திருமண மண்டபத்தில் பரபரப்பு!

shali / 5 days ago

Advertisement

Listen News!

நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் இந்த விழா, Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபல திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். அவர் நேரடியாக கலந்து கொண்டு உதவிகளை வழங்கியதுடன், பயனாளிகளுடன் உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.


இதில் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக, சில பயனாளிகளுக்கு செயற்கைக் கால்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் நேரடியாக பொருத்தி உதவிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அவரது எளிமையான அணுகுமுறை மற்றும் மனிதநேய செயல், பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இது உண்மையான சமூக சேவை” என கருத்து தெரிவித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து இதுபோன்ற நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement