• Dec 26 2024

புத்தாண்டில் வெளியான தக் லைஃப் படத்தின் அப்டேட்! சூப்பர் போட்டோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன

இந்தப் படத்தின் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இதனை அடுத்து தற்பொழுது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.


அதன்படி, தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் குறித்து கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ மூலம் அப்டேட் கொடுத்துள்ளனர். 

அதாவது கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோருடன் தயாரிப்பாளர் ஆனந்த் எடுத்த போட்டோவில், கமல்ஹாசன் நடுவில் நிற்க, மணிரத்னமும் தயாரிப்பாளர் ஆனந்தும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தபடி, 'ஆரம்பிக்கலாங்களா’ என கேட்பதை போல உள்ளது. அதற்கு கமல்ஹாசன் ஓகே என சொல்வதாக குறித்த போட்டோவில் தெரிகிறது.

இதேவேளை, ஜனவரி இறுதியில் தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement