• Apr 06 2025

"மாணவனை விரட்டி அடித்த சத்துணவு பணியாளர்.." பொங்கி எழுந்த அறந்தாங்கி நிஷா..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முக்கிய காமெடியன்களில் ஒருவர்  அறந்தாங்கி நிஷா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடியவர். இவர் ஒரு பட்டிமன்ற தொகுப்பாளரும் ஆவார். இவர் இன்று ஒரு அரசு பள்ளியில் சத்துணவு முட்டை கேட்டதற்காக 5ம் வகுப்பு மாணவனை ஒருவனை சத்துணவு வழங்கும் பணியாளர் துடைப்பத்தால் விரட்டி விரட்டி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 


குறித்த இந்த வீடியோவினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இவர்களுக்கு பணி நீக்கம் மட்டுமல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும் என கொந்தளிப்புடன் ஒரு சிறிய அறிக்கையினை பகிர்ந்துள்ளார். மேலும் பெற்றோர் இவர்களை நம்பியே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். அவர்களை பாதுகாப்பாக கவனிக்க வேண்டியது பாடசாலை ஊழியர்களின் பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.


மேலும் நிஷா குறித்த பதிவில் "ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு முட்டை கேட்டதற்கு 5 ம் வகுப்பு மாணவன் சத்துணவு ஊழியர்களால் தக்காப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது , ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும், யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் அந்த பணியாளர்களை பணி நீக்கம் மட்டும் அல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும்" என  கூறி இருக்கிறார்.

Advertisement

Advertisement