• Dec 26 2024

தங்கர்பச்சானை கைவிட்ட ஒட்டுமொத்த திரையுலகம்.. நாளை விஜய்க்கும் இதே கதிதான்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவருக்கு திரையுலக  பிரபலங்கள் பலர் ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ள விரும்பாமல் ஒருவர் கூட அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வரவில்லை என்று கூறப்படுகிறது. 

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடும் நிலையில் அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சேரன் உள்பட தனக்கு நெருக்கமானவர்களிடம் பிரச்சாரம் செய்ய வருமாறு தங்கள்பச்சான் அழைத்தபோது ஒருவரும் பதிலே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. 

அதற்கு காரணம் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை பகைத்துக் கொள்ள விரும்பாததால் தான் ஒட்டுமொத்த திரையுலகினரும் தங்கர்பச்சானுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

இதே திமுக கூட்டணியில் தங்கர்பச்சான் போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக பலர் வந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. நாளை இதே திமுக கட்சியை எதிர்க்க விஜய் வந்தாலும் இதே கதி தான் என்றும் அவருக்கும் திரையுலகில் இருந்து யாரும் ஆதரவு தர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement