• Dec 26 2024

அதை செய்ய வேண்டாம் என்று யாரும் சொல்லப்போவதில்லை,-நடிகர் சங்கத்தின் பெயர் இது தானா?- உண்மையை உடைத்த விஷால்

stella / 11 months ago

Advertisement

Listen News!

புரட்சிக் கலைஞர் என மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை  அவரது உயிர் பிரிந்து விட்டது. 

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் என அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.


விஜயகாந்த் மறைவின் போது அவரது இறுதி அஞ்சலியில் நடிகர் விஷால் பங்கேற்கவில்லை. வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். விஜயகாந்த் உயிரிழந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு இன்று சென்னை திரும்பிய விஷால் கேப்டன் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு உணவும் பரிமாரினார்.

இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம் விஜயகாந்திற்கு ஏன் நடிகர் சங்கம் முறையாக அஞ்சலி செலுத்தவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஷால் 'என்னால் இங்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்று கூட தெரியாமல் இருந்தேன். என்ன மன்னிச்சுடு சாமி என்ற வார்த்தையை தவிர வேறு என்ன நான் கேட்பது' என கூறினார்.


இதன்பின் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என மக்கள் உட்பட பல பிரபலங்களின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதில் கொடுத்த விஷால் 'கண்டிப்பாக நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் அண்ணனின் பெயர் வைக்கப்படும். விஜயகாந்த் பெயர் வைக்கலாம் என்றால் யாரும் வேண்டாம் என சொல்லப்போவது இல்லை. இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் வராதும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வருகிற 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு அஞ்சலி கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.மேலும் விஜயகாந்த் போலவே விஷாலும் சாப்பாடு போடுறாரே என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement