• Dec 26 2024

பிக்பாஸ் விக்ரமனுக்கு இப்படியொரு நிலமையா?-காவல் ஆணைய அலுவலகம் பிறப்பித்த உத்தரவு

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7நிகழ்ச்சியானது முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால் இதன் டைட்டில் வின்னராக யார் இருப்பார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்தது.

மேலும் இந்த 6வது சீசனில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் விக்ரமன். இவர் இந்த நிகழ்ச்சியில் சொல்லிய அறம் வெல்லும் என்ற ஒற்றை வாக்கியம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகினார். விக்ரமன் இந்த நிகழ்ச்சிக்குப் பின் தனியாக யூடியூப் சேனல் துவங்கி தனக்கான கருத்தையும் நியாயத்தையும் பதிவு செய்து வந்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் அடுக்கடுக்காக புகார் அளித்து பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.

மேலும் விக்ரமன் மீது என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி 12 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய வைத்துள்ளதாகவும், வேறு பல வார்த்தைகளால் காயப்படுத்தியதாகவும் தற்காலைக்கு தூண்டிஉள்ளார் எனவும் பல்வேறு குற்றங்களை சுமத்தி இருந்தார்.


இதனை மறுத்த விக்ரமன் என் மேல் பொய் புகார் அளித்து உள்ளார் கிருபா முனுசாமி. என் மீது சுமத்தி இருக்கும்அத்தனை குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தான்.  அது நான் தான் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார்.

முதலில் இதைக் கண்டு கொள்ளாத காவல்துறையை கண்டித்து நேரடியாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் கிருபா. இவர் அளித்த புகாரின் பேரில் சென்னை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் 13 க்கும் மேற்பட்ட வழக்குகள் விக்ரமன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.


விக்கிரமனை காவல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது காவல்துறை. இதனால் காவல் ஆணைய அலுவலகம் வந்து புகார்களுக்கு விளக்கம் அளித்த விக்ரமன் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பதில் ஏதும் கூறாமல் தன்னிடம் இருந்த கோப்புக்கள் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement