• Dec 26 2024

இன்னும் ஒரு பைசா கூட கொடுக்கல.. எல்லாம் வதந்தி..!! இளையராஜாவுக்கு வைக்கப்பட்ட ஆப்பு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூலித்த படமாக மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் காணப்படுகிறது. இந்த படம் மலையாள படமாக இருந்த போதும் தமிழ் நாட்டில் சக்கைப் போடு போட்டது.

மஞ்சுமெல் பாய்ஸ் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் புகழின் உச்சியில் இருந்த போது, அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக குறித்த படத்தின் தயாரிப்பாளர் மீது இளையராஜா அந்தப் பாடலை நீக்க வேண்டும்  என்றும் அதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

எனினும் குணா படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை பயன்படுத்துவதற்கான உரிமத்தை குணா பட தயாரிப்பாளரிடம் கேட்டு அதற்குரிய தொகையை முன்பே செலுத்தி விட்டதாக மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தான் இசையமைத்த பாடல்களின் உரிமம் முழுவதுமே தனக்கே சொந்தமானவை எனவும் அந்தப் பாடல்களை பயன்படுத்துவது சட்ட விரோதமானது எனவும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.


இதைத்தொடர்ந்து இளையராஜாவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவினர் அவர் கேட்ட இரண்டு கோடியில் இருந்து முற்பணமாக 60 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் இளையராஜாவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் ஒரு ரூபாய் கூட இழப்பீடாக கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இளையராஜாவின் பி.ஆர்.ஓ., மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பில் இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement