• Apr 24 2026

ஓஜி படத்தின் பிரம்மாண்ட வெற்றி; இயக்குநருக்கு காரை பரிசளித்த பவன் கல்யாண்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் 'தே கால் ஹிம் ஓஜி' படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், ஓஜி படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குநர் சுஜித்துக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.  

அதன்படி லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒரு விலை உயர்ந்த கார். இதன் ஆரம்ப விலை ரூ.98 லட்சம், அதிகபட்ச விலை ரூ.2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம்). இதன் ஆன்-ரோடு விலை 3 கோடியைத் தாண்டும். இவ்வாறான காரையே  இயக்குநர் சுஜித்துக்கு பரிசாக வழங்கியுள்ளார்.


மேலும் சுஜூத்துக்கு காரை பரிசளித்து, காரின் கதவைத் திறந்து அவரை ஓட்டுனர் இருக்கையில் அமர வைத்து அழகும் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.  

இந்த பரிசை பெற்ற இயக்குனர் சுஜித், இது தொடர்பில் சமூக ஊடக பக்கங்களில், நான் பெற்றதிலேயே சிறந்த பரிசு இதுதான். வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றேன்.. என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement