தமிழ் சினிமாவில் சமீப காலமாக வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியான படம் தான் ‘ஹாட் ஸ்பாட்’. பல நடிகர்கள் இணைந்து நடித்த அந்த படம், பேசுபொருளாக மாறி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதனை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், கலையரசன்,சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. வித்தியாசமான திரைக்கதை மற்றும் தைரியமான காட்சிகளால் படம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இந்நிலையில், ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் அடுத்த பாகமாக ‘ஹாட் ஸ்பாட் 2 Much’ என்ற புதிய படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தையும் விக்னேஷ் கார்த்திக்கே இயக்கியுள்ளார்.
‘ஹாட் ஸ்பாட் 2 Much’ படத்தில், பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாயகியாக பிரியா பவானி சங்கர் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் கவனத்தைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், ‘ஹாட் ஸ்பாட் 2 Much’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Best of luck team ….. Here is the fun maxx stars reveal from #HotSpot2Much ! Looking so much forward to it @vikikarthick88! Best wishes to @KJB_Talkies for a blockbuster ‘2nd part’https://t.co/zTFmrLl7MP
@KJB_iamBala @a2e_cinemasco @aneelkreddy @VVStudioz @thevishnuvishal…
Listen News!