மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ரஜிஷா விஜயன், தற்பொழுது தமிழ் சினிமாவிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஜிஷா விஜயன் தனது திரைப்பட பயணத்தை மலையாள படமான "அனுராக கரிக்கின் வெள்ளம்" மூலம் தொடங்கினார். கதாநாயகியாக அறிமுகமாகிய அந்த படத்திற்கு "சிறந்த நடிகை" விருதையும் வென்று தனது திறமையை உலகிற்கு காட்டினார். திறமையான நடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே மலையாள சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக விளங்கினார்.
தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "கர்ணன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அவருடைய நடிப்பினை பார்த்த அனைவரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
"கர்ணன்" பட வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடித்த "சர்தார்" படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். இத்தகைய படங்களில் அவர் காட்டிய நடிப்புத் திறன் ரஜிஷாவை தமிழ் சினிமாவில் வலிமையான நடிகை என நிலைப்படுத்தியது.
சமீபத்தில் ரஜிஷா விஜயன் தனது சமூக ஊடகப்பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்துள்ளார். அப்புகைப்படத்தில் தனது உடல் எடையைக் குறைத்து புதுமையான தோற்றத்துடன் ரசிகர்களுக்கு சப்பிறைஸ் கொடுத்துள்ளார்.
ரஜிஷா விஜயன் தனது உடல் எடையை குறைத்தது வெறும் தோற்றத்திற்காக மட்டும் அல்ல. திரையுலகில் தொடர்ந்தும் புதிய கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்வதற்காக என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். அத்துடன் சிலர் " இவங்க என்னப்பா இப்படி மெலிந்து ஆளே மாறிட்டாங்களே!" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!