• Dec 26 2024

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒருவர் பலி! ஒருவர் படுகாயம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் பவன் கல்யாண். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

தெலுங்கு திரைஉலகில்  பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் பவன் கல்யாண். அவருக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இவருடைய படம் ரிலீஸ் ஆனால் திருவிழா போல கொண்டாடுவார்கள். இவர் நடிகராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகின்றார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ப்ரோ படம் தமிழிலும் வெளியாகி ஹிட் அடித்தது. அந்த படத்தை தெலுங்கிலும் சமுத்திரக்கனி இயக்கியிருந்தார். பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் 100 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகின்றது.

ப்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பவன் கல்யாண் தே கால் ஹிம் ஓஜி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கியிருக்கிறார். பவன் கல்யாணுடன் ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

இவ்வாறு புகழின் உச்சியிலே காணப்படும் பவன் கல்யாண் நேற்றைய தினம் தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருடைய பிறந்த நாளை கட்சியினரும் ரசிகர்களும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.


இந்த நிலையில், அவருக்காக ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம் என கலை கட்டிய பவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகமான நிகழ்வு ஒன்றும் பதிவாகியுள்ளது.

அதாவது சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் அவருடைய கட்சித் தொண்டர்களான இரண்டு பேர் பவன் கல்யாண் பிறந்த நாளை ஒட்டி பேனர் வைத்துள்ளார்கள். அந்த பேனர் கட்டிய போது தவறுதலாக மின்சார கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி அதில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்னொருவர் படுகாயம் அடைந்து திருப்பதியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement