• Sep 17 2026

படத்தில் பல சப்ரைஸ்கள் இருக்கு! இத மட்டும் மிஸ் பண்ணிடாதிங்க! கோட் அப்டேட் உடைத்த வைபவ்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் உடன் GOAT படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் வைபவ் கொடுத்த சூப்பரான அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணலிலே இந்த விடையங்களை கூறியுள்ளார். 


மங்காத்தால மாதிரித்தான் கோட் படத்துலையும் எனக்கு ஒரு நல்ல கேரட்டர் கிடைச்சி இருக்கு. விஜய் அண்ணாகூட ஒரு ஷூட்டிங் நடந்தது அப்போ அவரு என்ன பாத்துட்டு  நீங்களும் இருக்கீங்களானு கேட்டாரு, நான் தெரியல அண்ணான்னு சொன்னேன். வெங்கட் கிட்ட நடிக்கட்டும்பா என்று சொன்னாரு. 


கோட் படம் வேற லெவல்ல இருக்கு. யாரும் எதிர் பாக்காதமாதிரி இருக்கு. இன்றோ மட்டும் மிஸ் பண்ணிராதீங்க. கிளைமேக்சுகு அப்புறம் ஒன்று இருக்கு அத இப்ப சொல்லமாட்டேன். நீங்க விஜய் சேர எப்படி பார்க்கணும்னு நினைக்கிறிங்களோ அப்படி இருப்பாரு. டான்ஸ் இருக்கு, எமோஷ்னல்லா இருப்பாரு, பயிட் இருக்கு, குறும்பா இருப்பாரு எல்லாமே இதுல இருக்கும். 


விஜய் சார் எல்லாரையும் படத்துக்கு கூட்டிட்டு போனாரு. ஷாருக்கான் படம் பார்க்க போனோம், சலார் பார்க்க போனோம் மக்களோட மக்களா இருந்து பார்த்து என்ஜோய் பண்ணினாரு. பிரேக் மட்டும் தான் போவாரு மத்த நேரம் எல்லாம் ஷூட்டிங்ஸ்பாட்லேயே இருப்பாரு. ரொம்ப கூல் செப்டெம்பர் 5 பாருங்க எல்லாரும் என்று சுவாரஷ்யமான கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement