• Dec 26 2024

ஒரு கோடி ரூபாய்க்கு கூட வாங்க முடியாது என்று சொன்ன படம்.. இன்று 50 கோடிக்கு கெஞ்சி கொண்டிருப்பதாக தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ஒரு கோடி ரூபாய்க்கு கூட வாங்க முடியாது என்று சொன்ன படத்தை இன்று 50 கோடி ரூபாய் கொடுக்கிறோம், தாருங்கள் என ஓடிடி தளங்கள் கெஞ்சி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியானமஞ்சிம்மெல் பாய்ஸ்என்ற திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தில்குணாபடத்தின் காட்சிகள் மற்றும் பாடல் இருப்பதை அடுத்து தமிழகத்திலும் சூப்பர் ஹிட் ஆகியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தலால் ஸ்லாம்படத்தின் வசூலை மிஞ்சி விட்டதாகவும் இந்த படம் உலகம் முழுவதும் தற்போது வரை 120 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் 120 கோடி வசூல் செய்து உள்ள நிலையில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் அதனை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தின் மொத்த வசூல் மலையாள திரை உலகில் இல்லாத அளவில் மிக பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில்மஞ்சிம்மெல் பாய்ஸ்படத்தின் ரிலீசுக்கு முன்னர் படக்குழுவினர் ஒரு சில ஓடிடி தளங்களை அணுகி வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதாக சில ஓடிடி நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை பார்த்து முன்னணி மூன்று ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி கொடுக்க தயாராக இருக்கிறது என்றும் ஒரு ஓடிடி தளம் 50 கோடி ரூபாய் வரை தருவதற்கு ஒப்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு கோடி ரூபாய்க்கு கூட வாங்க முடியாது என்று சொன்ன திரைப்படம், இன்று 50 கோடி ரூபாய்க்கு விலை போக இருப்பது மலையாள திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement