• Dec 26 2024

யார் சொன்னது நயன்தாரா டைவர்ஸ் என்று? ஒரு ஜாலியான குடும்ப பயணம்.. வைரல் புகைப்படம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

 

 

நடிகை நயன்தாரா தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடியாக தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் வதந்திகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

நடிகை நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் அவரது ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை பார்த்த நெட்டிசன்கள் உடனே அவர் தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று வதந்திகளை பரப்பி வந்தனர். அதுமட்டுமின்றி நேற்று தான் ஒரு முக்கிய விஷயத்தை இழந்துவிட்டதாக நயன்தாரா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்ததையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டிருந்தனர்.



இந்த நிலையில் சற்றுமுன் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உடன் தனி விமானத்தில் துபாய் செல்லும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். என் பாய்ஸ்களுடன் நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் வெளிநாட்டு பயணம் செய்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் அவர் இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் தன்னை பற்றி வெளிவந்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவே கருதப்படுகிறது.

ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர் விவகாரத்தில் அது ஒரு டெக்னிக்கல் மிஸ்டேக் என்றும் வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் நயன்தாரா கூறியிருந்த நிலையில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வந்ததை அடுத்து இந்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement