• Dec 26 2024

எங்களுக்கு Free Ticket கொடுத்தது எங்க தளபதி.. நாங்க ஜாலியா படம் பார்க்க போறோம்! நரிக்குறவர் மக்கள் நெகிழ்ச்சி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் சினிமாத் துறையை கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம்.

தற்போது லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இதனை பார்ப்பதற்காக பலரும் போட்டி போட்டு வருவதோடு, படத்தை பார்த்தவர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே எல்லோருக்கும் பெரிய பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அவர் நடிக்கும் ஸ்டைலும் நடையும் என்றும் மாறாதது. இதற்காகவே ரஜினிகாந்த்திற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகிறார்கள்.


தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் தற்போது வெளியாகி, உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த லால் சலாம்  படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் மக்கள் திரையரங்கிற்க்கு சென்றுள்ளார்கள்.


அதன்படி படம் பார்க்க சென்ற நரிக்குறவர் மக்கள் கூறுகையில்,

எங்களுக்கு தளபதி என்றால் ரஜினிகாந்த் தான். அவர எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படங்களான முத்து, பாட்ஷா போன்ற படங்கள் எங்களுக்கு மிகவும் பிடித்தது.

மேலும் எங்களுக்கு பிரீ டிக்கெட் கொடுத்தது எங்க தலைவர் ரஜினிகாந்த் தான். அதனால நாங்க ஜாலியா படம் பார்க்க போறோம் நன்றி வணக்கம் என்று  கூறி விடைபெற்றார்கள்.


Advertisement

Advertisement