• Dec 26 2024

மறைந்த kpy வடிவேலு பாலாஜியை நினைத்து புகழ் எமோஷனில் பதிவு... வைரலாகும் பெயின்டிங் புகைப்படம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் சினிமாவிலும் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். அதேநேரம் டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தனது மக்களின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார் புகழ். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. 


இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் வடிவேலு பாலாஜி. இவர் நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அனைத்து காமெடிகளிலும் அசால்டாக கலக்கியுள்ளார். பின்னர் சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் ஒருசில வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார். 


இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு, கை கால்கள் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேலு பாலாஜியின் இந்த மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் புகழ் இந்த அளவுக்கு வளர்வதற்கு உறுதுணையாக ஆரம்பம் முதலே இருந்தவர்.  


புகழின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வடிவேலு பாலாஜியுடன் புகழின் குடும்பம் இருக்கும் பெட்ன்டிங் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது அதனை தனது இன்சராகிறேம் பக்கத்தில் பகிர்ந்த புகழ் "இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் மாமா" என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 




Advertisement

Advertisement