• Dec 26 2024

நினைக்கவே அருவருப்பாக இருக்கு.. சமந்தாவுக்காக வரிந்துகட்டி பேசிய நானி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது சர்ச்சை ஏற்படுத்திய விவகாரமாக சமந்தா - நாக சைதன்யாவின் விவகாரத்து தொடர்பில் காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்த கருத்து தான். இவர்களுடைய விவாகரத்துக்கு கேடி ஆர் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்த விஷயம் காட்டுத் தீ போல இணையத்தில் பரவியது.

இதை தொடர்ந்து அமைச்சரின் இந்த கருத்துக்கு நாக சைதன்யா மற்றும் சமந்தா நேரடியாகவே தமது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும் கேடிஆர் இது குறித்து அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இத்தநிலையில், நடிகர் நானி தனது எக்ஸ் தல பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். ஆனாலும் குறித்த அரசியல்வாதியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், எப்பேர்பட்ட முட்டாள்தனத்தையும் பேசிவிட்டு அதிலிருந்து தப்பித்து விடலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளை பார்க்கவே அருவருப்பாக உள்ளது. உங்கள் வார்த்தைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கும் போது  மக்கள் மீது உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பது எங்களுடைய முட்டாள்தனம்.

இது நடிகர்கள் சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. எந்த அரசியல் கட்சியையும் கூட அவ்வாறு விமர்சிக்க கூடாது. மக்கள் பிரதி என்ற மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது சரி என்று நினைப்பதும் சரியல்ல. நமது சமூகத்தை மோசமாக பிரதிபலிக்கும் இத்தகைய செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement