• Dec 26 2024

ராமமூர்த்தியை அசிங்கப்படுத்திய பாக்கியா..! எல்லை மீறி பேசிய கோபியை எதிர்த்து கை ஓங்கிய செழியன்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், செழியனை மாப்பிள்ளை பார்ப்பதற்காக ஈஸ்வரி வீட்டில் வந்த பெண் வீட்டாரிடம், இந்த கல்யாணம் நடக்காது, செழியனுக்கு ஜெனி கூட வாழ தான் பிடிச்சி இருக்கு என சொல்கிறார். 

ஆனாலும் ஈஸ்வரி அவர்களை சமாதானம் செய்ய முயல, செழியன் பொறுத்துக் கொள்ள முடியாமல் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல, ஜெனி தான் எப்பவும் என் பொண்டாட்டி, அவளுக்காக நான் காத்து இருப்பன் என சொல்கிறார். 

இதைத்தொடர்ந்து உங்க வீட்டுலயே குடும்பம் ஒற்றுமையாக இல்லை என பெண் வீட்டார் கிளம்பி செல்கிறார்கள். அவர்கள் போனதும் வீட்டில் உள்ள ஈஸ்வரி, கோபியும் பாக்கியாவுக்கு பேசுகிறார்கள்.

மாறி மாறி எல்லாரும் பாக்கியாக்கு பேசுவதை பார்த்து செழியன் கோபப்பட்டு, எல்லாரும் நிறுத்துங்க, அம்மா செஞ்சது தான் சரி. நான் ஜெனிக்காக இருப்பேன், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க என கோபமாக திட்டுகிறார்.

இதை அடுத்து  பாக்கியா கிச்சன்ல இருக்க, அங்கு சென்ற ராமமூர்த்தி, செழியனை பற்றி பேச, அத்தைக்கு எல்லார் மேலையும் பாசம் அதிகம். ஆனா அவங்களுக்கு பிடிவாதமும் அதிகம். ஆனா நீங்களும் அவங்க கூட சேர்ந்துட்டீங்களே மாமா என்ன சொல்ல, அவர் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பது பற்றி பேசுகிறார்.


அதற்கு பாக்கியா  என்றும் இல்லாதவாறு, இது என் பிள்ளைட வாழ்க்கை நான் பார்த்துக் கொள்வேன் இதை யாரும் கெடுக்காமல் இருந்தீங்க என்றாலே காணும். நான் ஜெனியையும் செழியனையும் சேர்த்து வைப்பன் என கோபமாக சொல்ல, ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். திரும்பி செல்லும் போது பாக்கியா பேசியதை நினைத்து தடுமாறுகிறார்.

அதன் பின் ஜெனி வீட்டுக்குச் சென்ற பாக்கியா, யோசேப்பிடம் பேச முயல வழமை போல அவர் திட்டுகிறார். ஜெனி வரவும் அவரை இழுத்துக் கொண்டு போய் ரூமில் வைத்து பூட்டி விடுகிறார்.

ஆனாலும் வெளியில் இருந்த பாக்கியா செழியனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க, இன்டைக்கு பெண் வீட்டுல இருந்து வந்துட்டாங்க என சொல்கிறார்.  இதை கேட்டு ஜெனி உள்ளே இருந்து கத்துகிறார். 

ஜெனியின் அப்பாவிடம் அவர்களை ஒரு தடவை பேச வைக்குமாறு கேட்க, அவர் அந்த பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பாக்கியாவை கிளம்புமாறு திட்டுகிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement