• Dec 26 2024

விஜய் படத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா? இதை கவனிச்சீங்களா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது. கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி.


தனது 14 வயதிலேயே நடிகர் உபேந்திராவின் தங்கையாக கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி விட்டார். தொடர்ந்து கன்னட சினிமாவில் 15-க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் மாங்கல்யா என்ற கன்னட சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமாகி தொடர்ந்து காவியஞ்சலி, ஈஸ்வரி, ராதா ரமணன் உள்ளிட்டவற்றில் நடித்தார்.


தனது திறமையான நடிப்பின் மூலம் தெலுங்கிலும் வாய்ப்பு பெற்ற இவர் ஜெமினி டிவி சீரியல்களில் நடித்தார். இதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் நாணல் என்ற சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுசித்ரா பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது,  2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'சைவம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் நடிகை சுசித்ரா.

இந்த படத்தின் கதையின் நாயகி சாரா அர்ஜூனுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளன. மேலும், நிமிர் திரைப்படத்திலும் பாக்கியலட்சுமி சுசித்ரா ஷெட்டி நடித்துள்ளார்.

Advertisement

Advertisement