• Dec 26 2024

காலேஜ் டைம்ல கூட இப்படி ஆடுனதில்லை.. என்ன ஒரு குத்து.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ராஜியின் ஆட்டம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்திற்குள் சரவணன் - தங்கமயில் திருமணம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ராஜி மற்றும் குழலி செம டான்ஸ் ஆடிய காட்சி ஒளிபரப்பான நிலையில் ராஜியின் நடனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. அந்த சீரியலின் டயலாக்கில் நான் காலேஜில் பலமுறை ஆடி இருக்கிறேன் என்று சொன்ன நிலையில் உண்மையாகவே ராஜி கேரக்டரில் நடித்த ஷாலினி கல்லூரி காலத்தில் மேடையில் பல டான்ஸ்களை ஆடி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த டான்ஸ் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ராஜி கேரக்டரில் நடித்த ஷாலினி, கல்லூரி காலத்தில் நான் பல மேடைகளில் ஆடியது இந்த சீரியல் படப்பிடிப்பின் போது ஞாபகம் வந்தது என்றும் இந்த டான்ஸுக்கு எனக்கு உதவியாக இருந்த பிரபு அவர்களுக்கு எனது நன்றி என்றும் இந்த பயணம் ஒரு மிக அழகான பயணம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இந்த பதிவுக்கு மூன்று லட்சத்திற்கு அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இப்போதுதான் ராஜி கேரக்டருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் தரப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து அவரது கேரக்டர் பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொண்டு போகப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement