• Dec 26 2024

செந்திலை வறுத்தெடுத்த மீனா... தங்கமயிலுக்கு முதல் அதிர்ச்சி கொடுத்த கோமதி.. பாண்டியனின் கிண்டல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இன்றைய எபிசோடில் பாண்டியனிடம் இருந்து பேக்கை வாங்கிய தங்கமயிலை முறைத்து பார்த்த கோமதி, இந்த பேக்கை எங்க வைக்க வேண்டும் என்று தெரியுமா? பீரோ சாவி எங்க இருக்குன்னு தெரியுமா என்று அடுக்கடுக்காக கேள்வியை கேட்டு வெடுக்கென அவரது கையில் இருந்து பேக்கை பிடுங்கியது தங்கமயிலுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமின்றி பாண்டியனிடமும் கோமதி கோபமாக பேச தங்கமயில் ’என்னால் உங்கள் இருவருக்கும் பிரச்சனையா? என்று வருத்தத்துடன் பாண்டியனிடம் கேட்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் செந்திலை காணவில்லை என மீனா அறையில் கோபம் உடன் இருக்கும் போது செந்தில் வந்த பிறகு அவருடன் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார். திருமணம் ஆனதிலிருந்து நீங்கள் என்னை எங்கேயும் கூட்டி செல்லவில்லை, சரி சென்னை வந்தாவது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என்று பார்த்தால், நீங்கள் அப்பா சொன்ன வேலையை முடித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கூற ’உங்கள் மீது எனக்கு கோபம் இல்லை வருத்தம் தான்’ என்று கூறினார்.



இதையடுத்து ’கண்டிப்பாக நாளை நாம் இருவரும் வெளியே செல்வோம்’ என்று செந்தில் மீனாவுக்கு ஆறுதல் கூறுகிறார். அதன் பிறகு அவர் கதிரிடம் பேசும் போது நடந்ததை கூற. கதிர், ‘அப்பா சொன்ன வேலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, முதலில் மீனா அண்ணியை எங்கேயாவது வெளியே அழைத்து செல்ல பாருங்கள்’ என்று அட்வைஸ் செய்கிறார்.

இந்த நிலையில் கோமதி கோபமாக இருக்கும் நிலையில் அங்கு வரும் பாண்டியன் அவரது கோபத்தை கண்டு கிண்டல் செய்கிறார். நேற்று வந்த மருமகளை பாராட்டுகிறீர்கள், என்னை ஒருமுறை கூட நீங்கள் பாராட்டவில்லை’ என்று கூற ‘தங்கமயில் ஒரு வாரம் தானே ஆகிறது, தங்கமயில் செய்வதெல்லாம் பாராட்டக்கூடியதாக இருந்ததால் பாராட்டினேன் என்று சமாதானம் கூறுகிறார். ஆனாலும் சமாதானம் அடையாத கோமதி கணவன் மீது கோபமாக இருக்கிறார்.

இந்த நிலையில் கோமதி மற்றும் ராஜி ஆகிய இருவரும் கதிர் வருகைக்காக காத்திருக்கும் நிலையில் கதிர் வந்தபோது ’ஏன் இவ்வளவு நேரம்? என்று கோமதி கேட்க, அவருக்கு பதில் சொல்லாமல் கதிர் உள்ளே செல்கிறார். ஒரே வீட்டில் இருந்து கொண்டு இன்னும் எத்தனை நாள் தான் பேசாமல் இருப்பது என்று ராஜியிடம் கோமதி வருத்தப்படும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement