• Dec 26 2024

முதல் நாளே தங்கமயில் போட்ட டிராமா.. எக்குதப்பாக இருந்த செந்தில் ரூமுக்கு சென்றதால் அதிர்ச்சி.!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் காலை 4 மணிக்கு எழுந்து எல்லா வேலைகளையும் செய்தது குறித்து அத்தை கோமதியிடம் பெருமையாக பேசும் தங்கமயில், மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரையும் கடுப்பேற்றும் வகையில் நடந்து கொள்கிறார்.

இவ்வளவு நாளும் நீங்கள் பத்து பேர் உள்ள வீட்டில் தனியாக சமைத்து இருக்கிறீர்கள், உங்கள் கை இப்படி காய்த்து போய்விட்டது என்று கோமதிக்கு ஐஸ் வைக்கும் தங்கமயில், இனிமேல் நானே எல்லா வேலையும் செய்கிறேன் என்று கூறி கூறுகிறார். அப்போது மீனா, ராஜி  இருவரும் நாங்கள் இருவரும் இவ்வளவு நாள் வேலை செய்தோம் என்று கூற ’நீங்கள் வந்து கொஞ்ச நாள் தானே ஆகிறது, அதற்கு முன்பு வரை அத்தை தனியாக தானே செய்து கொண்டிருக்கிறார்’ என்று மீண்டும் ஐஸ் வைக்கிறார்.  

இதனை அடுத்து செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரையும் எழுப்பி காபி கொடுக்க போகிறேன் என்று தங்கமயில் சொல்ல, அதிர்ச்சி அடையும் மீனா, ராஜி அவங்க ரூமுக்கு எல்லாம் செல்ல வேண்டாம், அவங்களே வருவாங்க, அப்ப காப்பி கொடுக்கலாம் என்று கூறியும் தங்கமயில் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் மீனா ஓப்பனாக ’அவங்க எந்த கோலத்தில் படுத்திருப்பாங்க என்று தெரியாது என்று எச்சரிக்க, அந்த எச்சரிக்கையை மீறி செந்தில் அறைக்கு செல்லும் தங்கமயில், செந்தில் இருந்த கோலத்தை பார்த்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வருகிறார்.



அப்போது சரவணன், கதிர் அனைவரும் என்ன ஆச்சு என்று கேட்க, தங்கமயில் தர்ம சங்கடத்துடன் உள்ளே போகிறார். அதன் பிறகு செந்தில் ரூமுக்கு செல்லும் மீனா, தங்கமயில் செய்த டிராமாவை கூற செந்திலும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகிறார். அதேபோல் கதிர் மற்றும் ராஜியும் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து சரவணன் அறையில் தங்கமயில் நடந்ததை கூற ’அதெல்லாம் யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று சரவணன் ஆறுதல் கூறுகிறார். இதனை அடுத்து உங்களுக்கு பிடித்த சமையலை செய்கிறேன் என்று தங்கமயில் செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

பாண்டியன் வீட்டிற்கு மருமகளாக வந்த முதல் நாளே தங்கமயில் செய்யும் டிராமா, கோமதிக்கு புரியவில்லை என்றாலும் மீனா மற்றும் ராஜிக்கு புரிந்து விட்டதை எடுத்து மூன்று மருமகள்களுக்கு இடையே விரைவில் சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement