• Dec 26 2024

வீட்டுக்கு வந்த முதல்நாளே மீனாவை எதிரியாக பார்க்கும் தங்கமயில்.. குடும்பத்தை பிரித்துவிடுவாரோ?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்று முதலிரவு அறையில் அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்த இடத்தில் கதிர் மற்றும் ராஜி ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததை செந்தில் கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. ஒரு கட்டத்தில் வெட்கப்பட்ட ராஜி அறையை விட்டு வெளியே சென்ற பின்னர் செந்தில் கதிரை கேலி செய்த காட்சிகள் உள்ளன.

இதனை அடுத்து வெளியே வந்த ராஜி, அறை உள்ளே நடந்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்கமயில் மற்றும் மீனா ஆகிய இருவரும் ஏன் சிரித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்க, அதற்கு ராஜி ஒரு வழியாக சமாளிக்கிறார். இதனை அடுத்து என்ன நடந்திருக்கும் என்று புரியாமல் இருக்கும் மீனா முதலிரவு வரைக்கு சென்று பார்க்கலாம் என்று சென்றபோது தான் கதிரை செந்தில் செல்லமாக கண்டிக்கும் காட்சியை பார்க்கிறார். அதற்கு பிறகு மீனாவும் கதிரை கேலி செய்ய கதிர் வெட்கப்பட்டு கொண்டு வெளியே செல்கிறார்.



இதனை அடுத்து கதிர், ராஜி போல நம்மளும் ரொமான்ஸ் செய்யலாம் என்று செந்தில்-மீனா ஆகிய இருவரும் ரொமான்ஸை ஆரம்பிக்கின்றனர். அவர்கள் இருவரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது தான் தங்கமயிலை அழைத்துக் கொண்டு கோமதி மற்றும் ராஜி வரும் காட்சிகள் உள்ளன. செந்தில் -  மீனா இருவரையும் செல்லமாக கண்டிக்கும் கோமதி இருவரையும் வெளியே போக செல்கிறார்.

அப்போது மீனா வெளியே போகும்போது தங்கமயில் அவரை கோபமாக பார்க்கும் காட்சிகளும் உள்ளே போன பிறகு இவர்களுக்கென்று அறை இருக்கிறதும்போது என் அறையில் எதற்காக வந்து இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தங்கமயில் கடுப்பாகும் காட்சிகளும் இருக்கிறது. மொத்தத்தில் தங்கமயில், பாண்டியன் வீட்டுக்கு வந்த முதல் நாளே மீனாவை எதிரியாக பார்க்க ஆரம்பித்துள்ளதை அடுத்து, இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பாண்டியன் தனது மகன் சரவணனுக்கு குடும்பம் என்றால் என்ன? மனைவியை அனுசரித்து செல்ல வேண்டியது எப்படி? ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சரவணனுக்கு தூக்கம் வரும் நிலையில் இருந்தபோதும் அவர் விடாமல் தொடர்ந்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது. 

நாளைய எபிசோடில் மறுநாள் பூஜை அறையில் இருந்து தலைக்கு குளித்து சாம்பிராணி கரண்டியுடன் தங்கமயில் வரும் காட்சியும், அதை கோமதி, மீனா, ராஜி ஆகிய மூவரும் ஆச்சரியத்துடன் பார்க்கும் காட்சியும் உள்ளன.

Advertisement

Advertisement