• Dec 26 2024

ஒரு சூரியன் தான், ஒரு நிலா தான்.. நீங்க யாருன்னு காட்டுங்க.. கோமதியை ஏத்திவிடும் மீனா-ராஜி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன் எல்லோர் முன்னிலையிலும் செந்தில் மற்றும் கதிரை திட்டுகிறார். ஒரு வேலையை சொன்னால் நீங்கள் இருவரும் உருப்படியாக செய்வதில்லை என்றும் பொதுவாக பிள்ளைகளிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு அப்பா அமைதியாக இருப்பார்கள், ஆனால் என்னை பொறுத்தவரை உங்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு மாட்டிக்கொண்டு முழிக்கிறேன் என்றும் கூறுகிறார்.

ஆனால் அதே நேரத்தில் சரவணன் மட்டும் தான் நான் சொல்வதை கேட்கும் நல்ல பிள்ளை என்றும் அவனை பற்றி தான் எனக்கு கவலை இல்லை என்றும் கூறுகிறார். அப்போது கோமதி, செந்தில் மற்றும் கதிருக்கு ஆதரவாக பேச அதை பாண்டியன் தட்டிக் கழிக்கிறார். மீண்டும் மீண்டும் செந்தில் மற்றும் கதிரை திட்ட கதிர் அதை கண்டுகொள்ளாமல் வெளியே செல்கிறார். ஆனால் செந்தில் அமைதியாக திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் சரவணன், செந்தில், கதிர் ஆகிய மூவரும் சாப்பிடும் போது தங்கமயிலை நைசாக வெளியே போக சொல்லி விட்டு கோமதி மூன்று பேரிடமும் கோரிக்கை வைக்கிறார். அப்பா திட்டுகிறார் என்பதற்காக நீங்கள் மூவரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம், மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு செந்தில் மற்றும் கதிர் நாங்கள் எதற்காக சண்டை போடுகிறோம், அண்ணனை அப்பா பாராட்டினார் என்றால் அது எனக்கு சந்தோசம் தான்’ என்று கூறுகின்றனர்.



அப்போது கோமதி, ‘நல்லவேளை மீனா ராஜி மாதிரி நல்ல மருமகள்கள் இருப்பதால் பிரச்சனை வரவில்லை, அவர்கள் இடத்தில் வேறு யாராக இருந்தால் பிரச்சனை ஏற்படும் என்று கூற செந்திலும் அதை ஆமோதிக்கிறார். ஆனால் பழனி, ‘அக்கா நீ சொல்வது போல் இல்லை, ஒரு நாள் இந்த மூவரும் நிச்சயம் சண்டை போடுவார்கள், அதற்கு காரணம் அனேகமாக உன் புருஷனாக தான் இருப்பார்’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் மீனா மற்றும் ராஜி வர அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் கோமதி திடீரென தங்கமயில் குறித்து பேசுகிறார். அப்போது கோமதியை மீனா மற்றும் ராஜி ஏத்தி விடுகின்றனர். இந்த உலகத்தில் ஒரு சூரியன், ஒரு நிலா தான், அதே போல் நீங்கள் ஒரு மாமியார் தான், படிப்படியாக உங்களுடைய அதிகாரங்களை எல்லாம் மயில் எடுத்து விடுவார், கொத்து சாவியை வாங்கி விடுவார், மாமாவின் கணக்கு வழக்கு எல்லாம் பார்த்து விடுவார், உங்களை ஓரமாக சும்மா வைத்து விடுவார் என்று கூற, அப்போது, ‘இந்த கோமதி யார் என்று நீங்கள் சாயந்திரம் வரும் போது பார்ப்பீர்கள்’ என்று கோமதி கூறுவதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் நாளைய எபிசோடில் தங்கமயில் சாப்பாடு கொண்டு செல்லும் போது சரவணனுக்கு மட்டும் சாப்பாடு கொண்டு போ, அவருக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கோமதி கூற மயில் சோகத்துடன் ஏன் என்று கேட்கும் காட்சிகள் உள்ளன.

Advertisement

Advertisement