• Dec 26 2024

இரவில் வந்த மர்ம உருவம்.. தங்கமயிலால் மீண்டும் சிக்கல்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் ராஜியின் குடும்ப புகைப்படத்தை தற்செயலாக பார்க்கும் கதிர், அவருடைய குடும்பத்தை பற்றி, குறிப்பாக ராஜியின் அப்பாவை பற்றி விசாரிக்கிறார். எப்படியாவது அம்மாவையும் பாட்டியையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்ட நிலையில் ராஜியிடம் இருந்து வரும் தகவல்கள் தனக்கு சாதகமாக இல்லை என்பதால் சோர்ந்து போகிறார்.

இதனை அடுத்து செந்தில் மற்றும் மீனாவின் சில காமெடி காட்சிகள், கவர்மெண்ட் வேலைக்கு போவதென்றால் பரீட்சை எழுத வேண்டும் என்று மீனா சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் சென்னை செல்வது குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்  சரவணன் ’5000 ரூபாய் வாடகை என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது, எப்படியும் 5000 ரூபாய்க்கு மேல் அப்பாவுக்கு செலவு வைக்க கூடாது என்று கூறுகிறார்.



இதனை அடுத்து தங்கமயில் தற்செயலாக மொபைல் போனில் ரூம் வாடகை குறித்து செக் பண்ணும்போது 5000 ரூபாய் என்பது வெறும் அட்வான்ஸ் மட்டும் தான், 20000 ரூபாய் கட்ட வேண்டும் என்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதனை அடுத்து நள்ளிரவில் தனது அம்மாவிடம் போன் பண்ணி ஐடியா கேட்க, அவர் வழக்கம் போல் இப்போதைக்கு எதுவும் சொல்லாதே, அங்கே போய் மாப்பிள்ளையை கொடுக்க சொல், அல்லது அவருடைய அப்பாவிடம் வாங்கி கொடுக்க சொல், ஒவ்வொருத்தர் ஹனிமூன் செல்வதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள் என்று மீண்டும் தவறான யோசனைகளை கூறுகிறார்.

இதனை அடுத்து மிகவும் அதிர்ச்சி அடைந்த தங்கமயில் போனை வைக்கும் போது அருகில் ஒரு மர்மமான உருவம் போர்வையை போர்த்திக் கொண்டிருப்பதை பார்த்து அலறி சத்தம் போடுகிறார். அப்போது லைட்டை போட்டவுடன் அந்த உருவத்தை பார்த்து தங்கமயில் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement