• Dec 26 2024

மீனாக்கு சாமி கொடுத்த உத்தரவு.. கொந்தளித்த ரோகிணி..! ஆனந்த தாண்டவத்தில் விஜயா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகினியின்  அம்மா கிரிஷ் பற்றிய விஷயங்களை சொல்ல, இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகினி கோபத்தின் உச்சியில் காணப்படுகிறார். ஆனால் முத்து அவருக்கு போன் போட்டு  தருமாறு சொல்லவும், மீனா வேணாம் என்று முத்துவை  சமாதானப்படுத்தி கிரிஷுக்கு கேக் வெட்டி  கொண்டாடுகிறார்கள்.

அதன் பின்பு ரோகிணி தனது அம்மாவுக்கு போன் பண்ணி நான் நடுத்தெருவில நிக்கிறேன் என பேசுகின்றார். முத்துவும் மீனாவும் கிளம்பி போன பிறகு மீண்டும் வீட்டுக்கு சென்று, இனி அவன் இந்த வீட்டுக்கு வரக்கூடாது வந்தாலும் நீ முகம் குடுத்து பேசக் கூடாது என்று கண்டபடி பேசி விட்டு போகிறார்.

இதை தொடர்ந்து முத்துவும் மீனாவும் காரில் போய்க்கொண்டு இருக்கும் போது கிரிஷை தத்தெடுப்பது பற்றி இருவரும் பேசுகின்றார்கள்.  இருவரும் ஒரே ஐடியாவில் இருப்பதால் சாமியிடம் சென்று முடிவு கேட்டலாம் என்று மீனா கோவிலுக்கு செல்கிறார் .

அங்கு எழுதி போட்ட சீட்டில் தத்து எடுக்க வேண்டாம் என்று வருகின்றது. இதனால் சாமி முடிவு இதுதான் என்பதால் மீனா ரொம்ப அப்செட் ஆகி இந்த விஷயத்தை விட்டுவிடலாம் என்று சொல்லுகின்றார். ஆனாலும் முத்து இதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று சொல்லவும், இல்ல சாமி ஏதோ நம்மகிட்ட  சொல்ல வருகின்றார். அதனால் தத்தெடுக்க வேண்டாம் என்று மீனா உறுதியாக சொல்லுகிறார்.


மறுபக்கம் விஜயாவின் பரதநாட்டிய வகுப்பிற்கு புதிதாக ஆறு பேர் வந்து சேருகிறார்கள். இதனால் தனக்கு நம்பிக்கை வருவதாகவும் தான் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் நிற்க போவதாகவும் விஜயா கம்பீரமாக பேசுகின்றார்.

அந்த கிளாசுக்கு புதிதாக ஒரு பெண்ணொருவர்  வந்து சேர அவருடனே இன்னொரு இளைஞனும் வந்து சேருகின்றார். இதை பார்க்கும் போதே விஜயாவுக்கு ஆப்பு ரெடி ஆகின்றது என்று தோன்றுகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement