• Dec 26 2024

அட்ஜெஸ்மெண்டுக்கு ஓப்பனாகவே கூப்பிட்டாங்க.. ரூ.25000 வாங்கினேன்..‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் நடித்த நடிகை தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓப்பனாகவே கூப்பிட்டார்கள் என்றும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வங்கி வேலையில் வாங்கிக் கொண்டிருந்த நான் அந்த வேலையை விட்டுவிட்டு மீடியாவுக்கு சென்றதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் முல்லை என்ற கேரக்டரில் விஜே சித்ரா நடித்த கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென காலமானதால் அதன் பிறகு அந்த கேரக்டரில் காவ்யா அறிவுமணி நடித்தார். இந்த நிலையில், அவரும் அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதை அடுத்து முல்லை கேரக்டரில் நடித்தவர் தான் லாவண்யா. அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தான் அதன் பின்னர் அவர் சில சீரியல்களிலும்  சில குறும்படங்களிலும் நடித்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் லாவண்யா அளித்த பேட்டியில் தான் படித்து முடித்துவிட்டு முதலில் தனியார் வங்கியில் வேலை பார்த்ததாகவும் அதில் தனது 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்ததாகவும் தெரிவித்தார். அப்போது அந்த பணத்தை வைத்து தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டாலும் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள அந்த பணம் போதவில்லை என்பதால் மீடியாவுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டு வேலையை விட்டு விட்டேன் என்று தெரிவித்தார். 

நான் வேலையை விட்டுவிட்டதை தெரிந்ததும் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் என்னை திட்டினார்கள், ஆனால் நான் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆடிஷன் சென்று வாய்ப்புகளை தேடினேன்.  சில வாய்ப்புகளை தேடும் போது ஓப்பனாகவே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி கேட்டார்கள், அதற்கெல்லாம் உடன்படாமல் நான் எனது திறமை மீது வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து வாய்ப்புகளை தேடிய போது தான் எனக்கு ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்ல் வாய்ப்பு கிடைத்தது என்றும் அதன் பின்னர் ’சிப்பிக்குள் முத்து’ உட்பட சில வாய்ப்புகளை பெற்றேன் என்றும் அவர் கூறினார். 

தற்போது நான் சம்பாதிக்கும் பணத்தில் என் குடும்பத்திற்கு தேவையானதை வாங்கி கொடுக்கிறேன் என்றும் இருந்தாலும் அனாவசிய செலவு செய்யாமல் சேமிப்புக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வங்கியில் ரூ.25000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால் கடைசி வரை அந்த சம்பளம் தான் கிடைக்கும், ஆனால் தற்போது அதிக வருமானம் கிடைப்பது மட்டுமின்றி அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பேரும் புகழும் கிடைத்துள்ளது என்றும் இன்னும் அவர் மீடியாவில் மிகப்பெரிய இடத்தை தொட வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement