• Dec 27 2024

ஒரே இடத்தில் சிக்கிய இரு பலியாடுகள்.. கண்டிஷன் மேல கண்டிஷன் போட்ட விஜயா! விறுவிறுப்பான திருப்பம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், மனோஜ், ரோகினி இருவரும் ஜீவா பற்றி ஏஜென்டிடம் விசாரிக்க, அவர்கள் கஸ்டமர் டீடெயில்ஸ் தரமாட்டோம் என்று சொல்ல, ஜீவாவின் பாட்டி இங்குதான் இருந்தாங்க. அவங்க  இறந்துட்டாங்க என்றும் ரோகிணி பொய் சொல்லி கேட்டுப்  பார்க்கிறார். ஆனாலும் இதுல நிறைய ப்ரோசிஸர் இருக்குது அதனால கஷ்டமர் டீடெயில்ஸ் தரமாட்டோம் என்று மறுத்து விடுகிறார்கள். இதனால் வேற வழியில் கண்டுபிடிப்போம் என ரோகிணி, மனோஜ் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

இதை தொடர்ந்து வீட்டிற்கு ரோகினி மனோஜ் வர, ரோகிணி அப்பா ஜெயில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நேர்த்திக் கடன் வச்சிருக்கன். அதுக்கு பரிகாரம் செய்யணும் என்று விஜயா கண்டிப்பாக சொல்லுகிறார். மேலும் 48 நாள் தரையில பாய போட்டு படுக்கனும், ஒரு நேரம் சாப்பிட வேண்டும் என கண்டிஷன் மேல கண்டிஷன் ஆக சொல்லுகிறார். ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் சமாளிக்கவும் முடியாமல் இருக்கிறார்.


அந்த நேரத்தில் மீனா, ரோகிணி மலேசியாவில் வளர்ந்த பொண்ணு என்று சொன்னீங்க அவங்களால இந்த பரிகாரத்தை செய்ய முடியுமா?  ஒழுங்கா பரிகாரம் செய்ய இல்லாட்டி சாமி குத்தமா போய்டும் என்று சொல்ல, பெற்ற அப்பாவுக்காக இது கூட செய்ய மாட்டாவா என்று ரோகினியின் வாயை விஜயா அடைக்கிறார்

இதை தொடர்ந்து அவசர அவசரமாக எல்லாரும் ரெடியாகி கோவிலுக்கு செல்ல, அங்கு முத்துவையும் மீனா வர சொல்லுகிறார். அந்த நேரத்தில் முத்துவின் காரில் ஜீவா இருக்க, முத்து ஜீவாவிடம் ஒரு பத்து நிமிஷம் தான் போற வழியில கோயிலுக்கு போயிட்டு வரவா என கேட்க, சென்னையில் உங்க கார்ல தான் நான் வரப்போகிறேன். அதனால நீங்க போயிட்டு வாங்க என ஜீவா  சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து எல்லாரும் கோயிலுக்கு போக, அங்கு ரோகிணியின் உடுப்பை மாத்தி சாரி கட்டி அவருக்கு தலையில் தண்ணீர் ஊற்றி மாலை போட்டு பரிகாரம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement