• Dec 27 2024

மணமகள் கோலத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா.. கல்யாணம் பண்ண போறாரா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா திடீரென மணமகள் மேக்கப்புடன் கூடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ஹேமா திருமணத்திற்கு தயாராகி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா என்ற கேரக்டரில் ஹேமா நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டர் தான் இந்த சீரியலில் முக்கியத்துவம் தரும் வகையில் சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.

ஏற்கனவே ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் ஹேமா அசத்தலாக நடித்திருந்தார் என்பதை அடுத்து இரண்டாவது சீசன் இன்னும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் ஸ்டாலின் மற்றும் ஹேமா உட்பட ஒரு சிலர் மட்டுமே முதல் சீசனில் நடித்தவர்கள் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது தனது அழகழகான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்றுமுன் அவர் மணமகள் கோலத்தில் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து பதிவு செய்துள்ள நிலையில் ’அழகே பொறாமைப்படும் பேரழகி’ என்றும் ’கல்யாணத்துக்கு தயாராகி விட்டீர்களா’ என்றும் ’கல்யாணத்துக்கு பிறகு நடிப்பீர்களா’ என்றும் பலவிதமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. இந்த கமெண்ட்களுக்கு ஹேமா என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement