• Apr 17 2026

ஒரே நாளில் இரண்டு பட அறிவிப்பு!புது வருடத்தில் கலக்கும் ராகவா லாரன்ஸ் !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

நடிப்பில் சிறந்து விளங்குபவர் , நடனத்தில் மட்டும் சிறந்து விளங்குபவர் என்று ஒரு சில நடிகர்களை இலகுவாக பிரித்து காட்டிவிட முடியும். ஆனால் நடிப்பு நடனம் என இரண்டிலும் நான்தான் மாஸ்டர் என நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஆவார். 


நடனத்தில் திறமையை வளர்த்து நடன இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக அறிமுகமாகியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் தெலுங்கில் தனி ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் என்றே கூறலாம். தமிழில் பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் நடித்த ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இவருக்குக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.


இதன் வெற்றியை தொடர்ந்தே பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக நடிக்க்க உள்ள 2 திரைப்படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் வந்துள்ளது. லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியதை தொடர்ந்தே இவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் போஸ்டரும் வெளியாகி உள்ளது.


சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் குறித்த திரைப்படத்திற்கு ஹண்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறித்த படத்தை AR முருகதாஸ் இன் உதவி இயக்குனராக இருந்து விசாலின் அயோக்கியா திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிய வெங்கட் மோகன் இயக்குகின்றார்.இதன் போஸ்டரையே சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  


Advertisement

Advertisement