• Dec 25 2024

ICUவில் மகள் இருக்க அறந்தாங்கி நிஷா செய்த செயல்... வாழ்த்தும் மக்கள்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். ஆனால் தற்போது அவர் வீட்டில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. 


திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு பெண் சுதந்திரமாக தனது பயணத்தில் ஜொலிக்க முடியாது. அப்படி சின்னத்திரையில் கலக்க ஆரம்பித்து இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் தான் அறந்தாங்கி நிஷா. 


காமெடி நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கிய இவர் இப்போது நடிப்பில் செம பிஸியாக உள்ளார். மிக்ஜாம் பாதிப்பில் மக்கள் இருக்க அறந்தாங்கி நிஷா திருச்சியில் இருந்து மக்களுக்கு தேவையான விஷயங்களை வாங்கிக்கொண்டு வந்து சென்னையில் அனைவருக்கும் கொடுத்து வருகிறார். இப்படி மக்களுக்கு உதவிசெய்து வரும் நிஷாவின் மகள் இப்போது ICUவில் உள்ளாராம். அவரது மகளுக்கு டைபாய்டு பாசிட்டிவ் வந்துள்ளதாம்.


இந்த விடயத்தை  அவர் ஒரு வீடியோவில் கூற மக்கள் "குழந்தையை விட்டுவிட்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறார், நல்ல உள்ளம் என பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்". தான் கஷ்ட்டத்தில் இருந்தாலும் கஷ்ட்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்  அறந்தாங்கி நிஷா

Advertisement

Advertisement