பிரபல நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது தயாரிப்பு நிறுவனம் சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
அஜித் ,அர்ஜூன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் 2 வருடங்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் பல சர்ச்சைகளுக்கு பிறகு பெப்ரவரி மாதம் 06ம் திகதி ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சமீபத்தில் விடாமுயற்சியின் பாடல்களை ரிலீஸ் செய்து மாஸ் காட்டியது. அத்தோடு வெளியான ட்ரெய்லர் படு வைரலாகி வந்தது.
வெளியாகிய 2 பாடல்களுக்குமே ரசிகர்கள் அமோக வரவேற்பு தந்தநிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 'விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் " அடுத்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது காத்திருங்கள்,விடாமுயற்சி திருவினையாக்கும்" என்று பதிவிடப்பட்டுள்ளது. இது அடுத்த பாடலுக்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!