நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகி முதல் நாளே விமர்சனங்களினை சந்தித்தமையினால் படம் பெரிய தோல்வியை சம்பாதித்தது. இருப்பினும் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வந்தது.தற்போது தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ரெட்ரோ" மற்றும் பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45
அவை தவிர்த்து வெற்றிமாறன் இயக்கும் "வாடிவாசல்" திரைப்படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளார்.ஆரம்பத்தில் இப் படத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்திருந்த இவர் அகரம் நிறுவன பயனாளிகளின் கோரிக்கைக்கிணங்க தற்போது இப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளதாகவும் மற்றும் படப்புடிப்புகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப் படத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் சூர்யாவின் வீட்டில் இரண்டு மணிநேரம் படக்குழு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!