தமிழ் திரையுலகில் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் குமார், த்ரிஷா, மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த ‘விடாமுயற்சி’, திரையரங்குகளில் வெளியான முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை பெற்றது. ₹250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து கொண்டதுடன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆக்ஷன்-த்ரில்லர் படமாக இது கொண்டாடப்பட்டது.
தற்போது, இப்படம் Netflix-ல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மீண்டும் ஒரு மாஸான அனுபவமாக இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் இப்படத்தின் மூலம் "மகிழ் திருமேனி ஒரு மாஸ்டர்-கிளாஸ் இயக்குநராகவும் மாறியுள்ளார்!" என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் இப்படத்தில் சிறந்த நடிப்பு மட்டுமல்லாது ஒரு உணர்வுபூர்வமான கதைக்களத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்து படம் முழுவதும் உற்சாகப்படுத்தி இருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவின் 2025ன் மிகச்சிறந்த திரைப்படமாக இருக்கும் ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெற்றி பெற்றபிறகு, Netflix-ல் வெளியாகி, மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!