தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ‘டிராகன்’ திரைப்படம், அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி சூப்பர் ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. பிரதாப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இந்த படம், முதல் மூன்று நாட்களில் அதிகளவு வசூல் செய்துள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் தகவலின்படி, இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல் மூன்று நாட்களிலேயே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் பெற்றுக்கொள்ளும் என்பதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
மேலும் வாரமுடிவில், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் வாய்ப்பும் உள்ளது என்று திரையுலக நிபுணர்கள் கூறி வருகின்றனர். அத்துடன் இத்திரைப்படம் வெளிவந்த முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் குவிந்து வருகிறது. இந்த வருடத்தில் பத்து நாளில் ரூ.100 கோடி வசூல் செய்யும் முதல் தமிழ் படம் இதுதான் எனவும் சிலர் கூறுகின்றனர்.
Listen News!