• Dec 25 2024

'பிச்சை புகினும்..' சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரின் புதிய குறும்படம் ரிலீஸ்.!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் குறுகிய நாட்களுக்குள்ளே தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரு சீரியலாக இந்த சீரியல் பலரின் மனம் கவர்ந்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிப்பவர்கள் தான் முத்து - மீனா. இந்த சீரியலுக்கு தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் மலையாளத்தில் இந்த சீரியலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியலின் கதை களத்தில் மூன்று இளம் ஜோடிகள் காணப்படுவதோடு அதில் பணக்கார வீட்டு மருமகளுக்கும், ஏழை வீட்டு மருமகளுக்கும் வித்தியாசம் காட்டும் மாமியாரையும், அனைவரையும் சமமாக கொண்டு நடாத்தும் மாமனாரையும்  மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

d_i_a

அது மட்டும் இன்றி இந்த சீரியலில் தனது உழைப்பினால் முன்னுக்கு வரும் கேரக்டராக முத்து காணப்படுவதோடு தனது நண்பர்களுக்கு தோல் கொடுக்கும் தோழனாகவும் இவர் காணப்படுகின்றார். இதில் முத்துவுக்கு நெருங்கிய நண்பராக  செல்வம் என்ற கேரக்டர் காணப்படுகிறார். அந்த கேரக்டரில்  நடிப்பவர் தான் பழனியப்பன்.


இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பழனியப்பன் புதிய குறும்படம் ஒன்றில் நடித்துள்ளதாகவும் அதனைப் பார்த்து தனக்கு ஆதரவு வழங்குமாறும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தற்பொழுது அவருடைய குறும்படம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றதோடு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement