• Dec 25 2024

சினிமாவில் வெற்றி பெற்றது போல்..விஜய் அரசியலிலும் வெற்றி பெறுவார் ஆனந்தராஜ் கருத்து

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் அவர்கள் அரசியலில் முகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார் சமீபத்தில் இவரது கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று இதன் மூலம் அனைத்து மக்களையும் தன் வசம் ஈர்த்தார்.இவருக்கு மக்கள் மட்டுமன்றி திரைப்பிரபலங்களும் ஆதரவளித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது பிரபல தமிழ் நடிகர் ஆனந்தராஜ் சமீபத்தில், தஞ்சை பெரிய கோயிலில் தரிசனம் செய்த பின், நடிகர் விஜய் பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியது:"சினிமாவில் வெற்றி பெற்றதை போல், நடிகர் விஜய் அரசியலிலும் வெற்றி பெறுவார்" என்றார்.இது விஜயின் அரசியல் யாத்திரையின் மீது ஏராளமான எதிர்பார்ப்புகளையும், அவரது ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் அரசியலுக்கு முன்பும், அவருடைய சமூக பங்களிப்புகளையும் கருத்தில் கொண்டு, அவரது அரசியல் பயணம் குறித்து பலர் காத்துக் காத்திருப்பதாக தெரிகிறது.

தஞ்சையில் உள்ள பெரிய கோயிலில் ஆனந்தராஜ் தரிசனம் செய்ததை தொடர்ந்து, அவரது இந்த கருத்துக்கள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.மற்றும் குறித்த கருத்து விஜய் ரசிகர்களின் ஆர்வத்தினையும் எதிர்பார்ப்பினையும் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement