• Dec 24 2024

ப்ளீஸ் தப்பா போட வேண்டாம்! யாழ்ப்பாண மக்களை குறை சொல்லாதீர்கள்! கலாமாஸ்டர் வேண்டுகோள்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

ஹரிஹரனின்  இசைநிகழ்ச்சியில் நடந்த கலவரத்திற்கு யாழ்ப்பாண மக்களை குறை  சொல்ல வேண்டாம் என கலாமாஸ்ரர்  தெரிவித்துள்ளார்.  


மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய பிரபல  பாடகர் ஹரிஹரனின்  இசை நிகழ்ச்சி கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட குழப்பத்தால் பலமுறை இடைநிறுத்தப்பட்டு இறுதியில் குறுகிய நேரத்திற்குள் நிறைவடைந்தது.


குறித்த விடயம் தொடர்பில்  கலாமாஸ்டர் தனது முகப்புத்தகத்தில்,  நேற்று கோவிலுக்கு போகும் போது ஒரு பெண் மன்னிப்பு கேட்டார். நீங்கள் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள் என கேட்டேன். கிரவுட் உள்ளே வந்து விட்டது. ஒரு இலட்சம் பேர் உள்ளே வந்ததால் தான் இந்த பிரச்சினை வந்தது. 


நீங்கள் யாழ் மக்களை குறை சொல்லாதீர்கள். நீங்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும்  தப்பாக போட  வேண்டாம். பாவம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ரசிக்கத்தான் வந்தார்கள். அடிதடி கிடையாது,கூட்டம் வந்து விட்டது. அதுதவிர இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement