• Dec 25 2024

மீண்டும் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குனர்.. ஓடிடியில் வெளியான படத்தின் 2ஆம் பாகம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

 விக்ரம் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’மகான்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவோ போராடியும் தயாரிப்பு தரப்பினர் வலுக்கட்டாயமாக அமேசான் ஓடிடிக்கு கொடுத்ததால் இருவருமே அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் அமேசான் ஓடிடியில் வெளியானாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் ’மகான் 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இதில் இரண்டு அட்டகாசமான ’மகான்’ படத்தின் ஸ்டில்களையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் விரைவில் ’மகான் 2’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஏற்கனவே ’மகான்’ படத்தில் இரண்டாம் பாகத்திற்கான லீட் வைத்திருந்த கார்த்திக் சுப்புராஜ் ’மகான் 2’ படத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து ஏற்கனவே அவர் விக்ரமிடம் பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் அதே நேரத்தில் இந்த படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்றும் முதல் பாகத்தை விட மாஸாக இரண்டாம் பாகம் உருவாக்கப்பட இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், துருவ் விக்ரம்,  சிம்ரன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement