வ. கௌதமன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் தான் படையாண்ட மாவீரா. இந்த படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
வி.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் கதை, வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் சுய சரிதையை தழுவியதாக அமைந்துள்ளது.
எதிர்வரும் 19ஆம் தேதி உலக அளவில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 'படையாண்ட மாவீரா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் இலங்கையில் நடைபெற்ற செம்மணி படுகொலை தொடர்பில் இயக்குநர் பேசியுள்ளார். இது ஒட்டு மொத்த திரையுலகையும் தாண்டி உலக வாழ் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் அவர் பேசுகையில், சுமார் 50,000 ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் குடிகளில் நான் உயிரா நேசிக்கிற அத்தனை சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தை பரிசாக அளித்தன.
அந்த வலியையும் வேதனையும் நான் இன்றும் சுமந்து கொண்டுள்ளேன். ஏனென்றால் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் நம்புகின்றேன்.
வரலாற்றை வரலாற்றில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என நான் சொல்லவில்லை.
வரலாறாக நின்ற ஒருவனின் வரலாற்றை பற்றி சொல்லும் போது தான் இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கின்ற குப்பை கூலங்குகளும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் படையாண்ட மாவீரா..
நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை... எந்த இனத்தையும் காயப்படுத்தல.. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்கு நான் உடந்தையா இருந்ததில்லை.. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது.. சில காலம் மறைக்கலாம் ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்..
20 வருஷத்துக்கு முன்பு ஆயிரக்கணக்காணவர்களை கொன்று புதைத்த செம்மணியில் இன்று சிங்களவர்கள் வந்து ஆய்வு செய்து தினம் தினம் எலும்புக் கூடுகளை தோண்டி எடுக்கின்றார்கள்.
பிறந்த குழந்தையின் கழுத்தில் கால் கட்டை விரலை வைத்து அழுத்தும் போது அந்த குழந்தை கத்துவதை ரசிப்பது என்பது என்ன மனநிலை?
என் தாய்க்கும், என் தாய் மொழிக்கும் சமமான தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறமாகக் கொண்ட அந்த மண்ணில் நடந்த அத்தனை கொடூரங்களே இன்று அவர்களுக்கு எதிராகவே வெளியே வந்து கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.
Listen News!