• Dec 26 2024

பொங்கல் ட்ரீட்.! 500 கோடி வசூலை அசால்ட்டாக குவித்த டோலிவுட்..! 200 கோடிக்கே முக்கும் கோலிவுட்..?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதுபோலவே, கடந்த ஆண்டு டோலிவுட்டில் பாலய்யா, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் பிரம்மாண்டமாக வெளியாகின. ஆனாலும் அதில் எந்த ஒரு படமும் வசூல் ரீதியாக பெரிய சாதனையை படைக்கவில்லை.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான பிரபாஸின் சலார்  திரைப்படமும், 600 முதல் 700 கோடி வரை தான் வசூல் பெற்று உள்ளதாம்.


அதுமட்டுமின்றி, கடந்தாண்டு பாலிவுட் மற்றும் கோலிவுட் ஆகிய இரண்டும் அதிக வசூல் ஈட்டிய முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதோடு, மூன்றாவது இடத்தில் தெலுங்கு திரையுலகம் இடம்பெற்றுள்ளதாம்.

அத்துடன் கோலிவுட்டில் வாரிசு, லியோ படங்கள் 900 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஈட்டிக் கொடுக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் 600 கோடி ரூபாயும், பொன்னியின் செல்வன் 350 கோடி ரூபாயும், துணிவு 200 கோடி ரூபா வசூலையும் கடந்த ஆண்டு ஈட்டி உள்ளது.


இந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு வெளியான படங்களில் டோலிவுட்டின் கை ஆரம்பத்திலேயே ஓங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படங்களில் முக்கிய போட்டியாக காணப்பட்டது கேப்டன் மில்லர் படமும், அயலான் படமும் தான்.

இந்த படங்கள் இரண்டும் பெரிதாக வசூலை பெற இல்லை என்பதோடு, இதற்கான வெற்றி கொண்டாட்டங்களும் நடத்தப்படவில்லை.

கேப்டன் மில்லர், அயலான், ப்ளூ ஸ்டார் ஆகிய படங்களை சேர்த்து ஒட்டுமொத்தமாக  200 கோடி பாக்ஸ் ஆபிஸைத் தான் தமிழ் சினிமா பெற்றுள்ளதாம்.

அதேவேளை, தெலுங்கில் வெளியான மகேஷ் பாபு குண்டூர் காரம் 200 கோடி வசூலையும், அதற்கு போட்டியாக வெளியான ஹனுமான் படம் 300 கோடி வசூலையும் பெற்று, ஒட்டு மொத்தமாக 500 கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement