• Dec 26 2024

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' நிரோஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செம Vibe

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நிரோஷா. 

இவர் தனது சிறுவயது முதலே நடிப்புத் துறையில் நுழைந்து விட்டார். அதிலும் தனது சொந்தத் தந்தைக்கே மகளாக நடித்திருப்பார்.

இவர் எம்.ஆர்.ராதாவின் மகள் மட்டுமல்லாது நடிகை ராதிகாவின் தங்கையும் கூட. இவருக்கு ராஜு, மோகன் என்ற இரண்டு அண்ணன்களும் உள்ளனர்.

ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பின் மீது அந்தளவிற்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் பின்னர் அந்த நடிப்பிலேயே ஊறிப் போனார்.


இவர் தனது அக்கா ராதிகாவுடன் எடுத்த ஒரு புகைப்படம் பல இடங்களுக்கும் பரவத் தொடங்கவே அதனைப் பார்த்துவிட்டு ஒரு சில இயக்குநர்கள் இவரை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். 

அந்தவகையில் மணிரத்னத்தின் 'அக்கினி நட்சத்திரம்' படத்தில் நடித்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

'செந்தூரப்பூவே'. அந்தப் படத்தில் தான் இவருக்கும், ராம்கிக்கும் இடையிலான காதலும் உருவாகத் தொடங்கியது.

இதை தொடர்ந்து, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார் 2' தொடரின் 5 பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஸ்டாலின் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை நிரோஷா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி சீரியல் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement