• Jan 14 2025

இவருக்கு பதில் இவர்? ‘பொன்னி’ சீரியலில் இருந்து விலகிய நடிகை.. என்ட்ரியான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகையர் திடீரென தொடரிலிருந்து விலகுவதும் அவருக்கு பதிலாக ’இவருக்கு பதில் இவர்’ என சர்வ சாதாரணமாக வேறு நடிகர், நடிகையை மாற்றி நடிக்க வைக்கும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்னி’ சீரியலில் ஏற்கனவே ஒரு கேரக்டரில் நடித்த நடிகை மாற்றப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பொன்னி’ என்பதும் பெங்காலியில் பிரபலமான சீரியலின் தமிழ் ரீமேக்காக இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.



கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளுக்கு மேல் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடரில் சபரிநாதன், வைஷு சுந்தர்,  சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன், வருண் உதய், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக முதலில் ஷமிதா நடித்த நிலையில் அவர் சில காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் சிந்துஜா விஜி நடித்த நிலையில் தற்போது அவரும் இந்த தொடரில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ் ’ சீரியலில் நடித்து வரும் ரிஹானா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ’ஆனந்த ராகம்’ சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement