• Dec 26 2024

பொன்னி சீரியல் டீமில் நடந்த வெற்றிக் கொண்டாட்டம்.. தீயாய் பரவும் போட்டோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பொன்னி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது. சாதாரண குடும்பத்தில் எதிர்பாராத விதமாக திருமணமாகி செல்லும் பொன்னி, அங்கு அனுபவிக்கும் சம்பவங்களை தான் இந்த சீரியல் எடுத்துக்காட்டுகின்றது.

பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வைஷ்ணவி. இவர் ஏற்கனவே விஜய் டிவி ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார்.

d_i_a

இவர் வழங்கிய பேட்டி ஒன்றில், தனது வீட்டார் படிபடி என்று சொன்னபோதிலும் தான் நடி நடி  என்று நடிப்பில் ஆர்வம் காட்டியதாகவும் ஆனால் பல ஆடிஷனுக்கு சென்று ரிஜெக்ட் ஆன காரணத்தினால் நமக்கும் நடிப்புக்கும் செட்டாகாது என்று மீண்டும்  படிப்பில் கவனம் செலுத்தியதாகவும் கூறினார்.

ஆனாலும் நடிக்கத்தான் முடியவில்லை என்று டிக் டாக் வெளியிட்டதாகவும் அதன் மூலம் தனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் என்பவருக்கும் வைஷ்ணவிக்கும் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


இந்த நிலையில், பொன்னி சீரியல் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை பட குழுவினர் புகைப்படத்துடன் வெளியிட்டு தமது சந்தோஷத்தை பகிர்ந்து உள்ளார்கள். இந்த சீரியல் மேலும் சிறப்பாக கொண்டு நகர்த்துவதற்கு தமது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்..

Advertisement

Advertisement