• Dec 25 2024

வசூலில் கொடிகட்டி பறக்கும் அமரன் திரைப்படம் - படக்குழுவின் சம்பள விவரங்கள் வெளியீடு!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ப்ரொடக்ஷனில் தயாரிக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் வசூலில் வெற்றிகரமாக நீடித்து வருகிறது. இந்த படம், முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


படக்குழுவின் சம்பள விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் மூன்றாம் இடத்தில் உள்ள சாய்பல்லவி ரூ. 3 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ரூ. 6 கோடி சம்பளம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலிடத்தில் உள்ள சிவகார்த்திகேயன் ரூ. 30 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்கிற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பள விவரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அமரன் படத்தின் வெற்றிக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்துள்ளது.


Advertisement

Advertisement