• Dec 27 2024

பூர்ணிமா - மாயாவுக்கு கடைசியில் பிக்பாஸ் வைத்த செக்! இதை கவனிச்சீங்களா? க்ளோசப் பண்ணிய கேமரா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

அதன்படி, பிக் பாஸ் சீசன் 7ல் நேற்றைய தினம் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வைத்து பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் ஆண்டவர்.

அதன்படி, பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லை மீறும் போட்டியாளர்களாக மாயாவும் பூர்ணிமாவும் தொடர்ந்து வருகின்றனர். எனினும் அவர்களை கமல் தட்டிக் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.


இவ்வாறான நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் விதி மீறல்கள் குறித்தும் தன்னை பற்றி உள்ளே பூர்ணிமா பேசி வருவது குறித்தும் நேற்று கமல்ஹாசன் பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதிலும் 'நான் என்ன பேச வேண்டும், யாரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று எனக்கு யாரும் டயலாக்குகள் எழுதிக் கொடுக்க வேண்டாம்' என அனைவர் முன்னிலையிலும் பூர்ணிமாவை மறைமுகமாக தாக்கி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


அதுமட்டுமின்றி, 'குடிகார அங்கிள் இந்த வாரம் என்ன பேச போகிறார்' என பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா பேசி இருந்தார். மேலும் அவர் பாரபட்சம் காட்டுகிறார், என்னை திட்டினார், தினேஷ்க்கு இந்த வாரம் என்ன சொல்லுறார் பார்ப்போம் என வரிசையாக கமலுக்கு பேசி இருந்தார்.

இதனை நினைவில் வைத்து  பூர்ணிமாவை மறைமுகமாக தாக்கும் வகையில் நேற்று எபிசோடு ஆரம்பத்திலேயே பேசி இருந்தார் கமல். 

அத்துடன், யாரும் இங்கு எனக்கு பேவரைட் கிடையாது. நீங்க நான் என்ன சொல்லணும்னு எனக்கு டயலாக் எழுதி கொடுக்காதீங்க. டயலாக் எழுதுவதில் எனக்கு அனுபவம் இருக்கு, ஆனா உங்களுக்கு யாருக்கும் உள்ளே அனுபவம் இருக்குதா? என்று கேட்டு அதோடு நான் இல்லாமல் ஒரு கண்டன்ட் உங்களால கிரியேட் பண்ண முடியுதான்னு முதல்ல பாருங்க. உங்க கேம்ல உங்களோட பார்ட்னர் நான் இல்ல, நான் ஆங்கர். உங்க கன்டண்டுக்கு வாக்கிங் ஸ்டிக்கா நான் இருக்க மாட்டேன். ஒருத்தர் தோளை பிடிச்சிட்டு நடங்க' என்று ஆவேசமாக பேசி இருந்தார்.


இவ்வாறு கமல் பேசிக் கொண்டு இருக்கும் போதே, பிக் பாஸ் வீட்டிலுள்ள கேமரா பூர்ணிமா மற்றும் மாயாவின் முகத்தை க்ளோசப்பில்  காட்டிக் கொண்டிருந்தது. 

அதேபோல, நிகழ்ச்சி முடிவுற்றதும் வெளியே வந்த பூர்ணிமா மாயாவிடம் எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று கதறி அழுது கொண்டிருந்த அந்த காட்சியையும் கேமரா சூம் பண்ணி காட்டிக் கொண்டிருந்தது.

இவ்வாறு, பிக் பாஸ் வீட்டில் வீதி மீறல்களை செய்த பூர்ணிமா, மாயாவை கமல் மறைமுகமாக என்றாலும் தாக்கி இருப்பது ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Advertisement