• Dec 26 2024

பச்சோந்தியே பூர்ணிமாவை பார்த்து அலறிய தருணம்.. அவசர அவசரமாக நீக்கப்பட்ட வீடியோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் பூர்ணிமா தனது சமூக வலைத்தளத்தில் பச்சோந்தியுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்த நிலையில் அதன் பின்னர் திடீரென அவசர அவசரமாக அந்த வீடியோவை நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பூர்ணிமா, மாயா உடன் சேர்ந்து சக போட்டியாளர்களை கேலியும் கிண்டலும் செய்தார் என்பதும் டார்ச்சர் செய்தார் என்பதும் குறிப்பாக அர்ச்சனாவை இருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள் என்பதும் அந்த நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். 

அதுமட்டுமின்றி பலரை அவர் பச்சோந்தி என்று திட்டினார் என்பதும் குறிப்பாக விஷ்ணுவை அவர் பச்சோந்தி என்று திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையில் பூர்ணிமா தான் பச்சோந்தி என பார்வையாளர்கள் திட்டியதை பூர்ணிமா வெளியே வந்த பின்னர் பார்த்திருப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்கு சென்ற வீடியோவை பூர்ணிமா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அதில் உயிரியல் பூங்கா ஊழியர் ஒருவர் பச்சோந்தியை எடுத்து பொறுமையாக பூர்ணிமாவின் தோளில் வைத்தார். இதை பார்த்து சந்தோஷம் அடைந்த பூர்ணிமா, திடீரென பச்சோந்தியை கையால் பிடித்து விளையாடப் போக அதனால் அதிர்ச்சி அடைந்த பச்சோந்தி, பூர்ணிமாவை தாக்க தொடங்கியது.

இதனால் அலறிய பூர்ணிமா உயிரியல் ஊழியரிடம் பச்சோந்தியை தூக்குங்க தூக்குங்க என்று கூறினார். அதன் பிறகு பச்சோந்தியை அந்த ஊழியர் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக அதன் இருப்பிடத்தில் கொண்டு போய் சேர்த்தார். கொஞ்சம் அசந்து இருந்தால் பூர்ணிமாவை பச்சோந்தி தாக்கி இருக்கும். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவான நிலையில் ஒரு பச்சோந்தியை பார்த்து நிஜ பச்சோந்தியே பயப்படுகிறது போன்ற கமெண்ட்கள் மிக அதிகமாக வர தொடங்கியதை அடுத்து பூர்ணிமா அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

Advertisement

Advertisement