• Dec 26 2024

விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரவுள்ள பிரபல சீரியல்! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியலுக்கென்று பெயர் போன சேனல்கள் தான் விஜய் டிவி மற்றும் சன் டிவி. இந்த இரண்டு சேனல்களுமே புதிய புதிய சீரியல்களை களம் இறக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றதோடு டிஆர்பி ரேட்டிங்கிலும் போட்டி போட்டு முன்னிலை வகித்து வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றிற்கு தனித்தனியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அதிலும் இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போது சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, செல்லம்மா, பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல சீரியல்கள் மக்களின் விருப்பத்துக்குரிய சீரியலாக மாறியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்கள் முதல் ஐந்து இடத்திற்குள் முன்னேறி முதலாவது இடத்தையும் சிறகடிக்க ஆசை சீரியல் பெற்று இருந்தது.


ஆனாலும் அதன் பின்பு சன் டிவி சீரியல் தனது கதைக்களத்தை மாற்றி எப்படியோ விட்ட இடத்தை பிடித்து விட்டார்கள். தற்போது மீண்டும் விஜய் டிவி சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாக உள்ளது.

அதாவது விஜய் டிவியில் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் திடீரென முடிவுக்கு வரப் போவதாக வெளியாகியுள்ள தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளனர்.

Advertisement

Advertisement